உன்வார்தையில்உள்ள, நிராகரிப்பிலும்உனர்ந்தேன்... ஒரு வலிமிகுந்தசுகத்தை..! - செந்தில் குமார் -
Saturday, October 3, 2009
மண் மீது விழுந்த மழைதுளிகள் மண்வாசத்தையும்... என் மீது விழுந்த மழைதுளிகள் உன் வாசத்தையும் தந்ததால் உனர்ந்தேன்... என்னில் பெய்த மழை நீ என்பதை..
- செந்தில் குமார் -
Tuesday, September 8, 2009
சில கணவுகளுகும், சில நினைவுகளுகும், இடையில் சிதைந்து கிடந்த என் இதயத்தை, உன் விழிப்பார்வையால் ஒருமுகப்படுத்தினாய்... உருவம் இன்றி கிடைந்த என்னை உன் அன்பெனும் உளியால், உருவம் கொடுத்தாய். உருவம் கொடுத்தாய்... உயிர் கொடுக்க மறந்தாய்... இன்று உன் முன் ஓர் கற்சிலையாய் நான்... - செந்தில் குமார் -
கார்மேகமாய் சூழ்ந்திருந்த நீ உன் பிரிவை பரிசளித்தால் உனர்ந்தேன், என் தனிமையின் வெப்பத்தை... காலம் எனும் கானல்னீரில் கரைந்து விட்ட உன் நினைவுகளை மீண்டும் பெற காத்திருக்கின்றேன்... மற்றுமோற் மழைகாலத்திற்காக.... - செந்தில் குமார் -
மகிழ்ச்சி தந்த மழைதுளிகள் இன்று வெறும் மழை நீராய் மட்டும் என்னை நனைத்துசென்ற உன் பிரிவில்... உனர்ந்தது உன் பிரிவை மட்டுமல்ல... என்னை சுற்றும் உன் நினைவுகளையும் தான்... - செந்தில் குமார் -
சிறகுகளும் சிலுவையாகிபோன ஓர் இலையுதிர் காலத்தை, வசந்தமாக மாற்றிய உன் நட்பில்.... என் உதிர்ந்த சிறகுகளில் வரைந்த ஓவியத்தின் வண்ணங்களாய் மிளிர்கிறது நம் நேசம்! - செந்தில் குமார் -
உன் விழிகள் பேசியதில்... என் மொழிகள் மௌனமானது! ஆம், இன்று உன்னிடம் கற்று கொண்டேன், காதலில் ஓர் புதிய மொழி... மௌனம்! **** என்ன செல்லி புரியவைபது தென்றலுக்கு... நீ அடிக்கடி கலைத்து செல்வது, என்னவள் கூந்தலை மட்டும் அல்ல... என் மனதையும் தான்!. - செந்தில் குமார் -
வார்த்தைகளால் பேச நினைத்த என்னை உன் மௌனத்தால் சிறை வைத்தாய்..... இன்று கவிதைகலால் பேச நினைகிறேன் கண்ணி்ராய் வந்து என்னை சிறை வைக்கிறாய்... - செந்தில் குமார் -