உன்னில் தொலைத்து விட்ட என்னை தேடிகொன்டு இருக்கிறேன், இன்று... உன் கால்கொலுசில் இருந்து சிதறிய முத்துகள் போல, நீ சென்ற வழி எங்கும், சிதைந்து கிடக்கின்றன என் நினைவுகளின் மிச்சம்...
வறன்ட பாலைவனத்தில் நடைந்து சென்ற என்னை, என் கரம்பிடித்து மலர்சோலைக்கு அழைத்து வந்ததாய்... இன்று உன் விரல் பிடித்து நான் பயனம் செய்த பாதை முடிந்தாலும், உன் நினைவுகளுடன் நான் செய்யும் பயணம் என்றும் முடிவதில்லை...
மலர்களின் தேசத்தில் பிறந்த நம் நேசம் உன் பிரிவால், நீ உதிர்த்து சென்ற ஒற்றை பூவென உலர்ந்து விட்டது, இன்று என்னை விட்டு நீ சென்றாலும், உனக்கான என் தேடல்கள் மட்டும் தொடரும், முற்றுப்பெறாத இக் கவிதையைப் போல...