Thursday, November 5, 2009

உன் நினைவுகள்




உன் நினைவுகள்


இழந்துவிட்ட உன் அருகாமையினால்...
இன்று உன் நினைவுகள் மட்டும்,
என் கவிதைகளாக...

- செந்தில் குமார் -

Monday, October 19, 2009

வலியின் சுகம்...


உன் வார்தையில் உள்ள,
நிராகரிப்பிலும் உனர்ந்தேன்...
ஒரு வலி மிகுந்த சுகத்தை..!
- செந்தில் குமார் -

Saturday, October 3, 2009



மண் மீது விழுந்த மழைதுளிகள்
மண்வாசத்தையும்...
என் மீது விழுந்த மழைதுளிகள்
உன் வாசத்தையும் தந்ததால் உனர்ந்தேன்...
என்னில் பெய்த மழை நீ என்பதை..

- செந்தில் குமார் -

Tuesday, September 8, 2009



சில கணவுகளுகும்,

சில நினைவுகளுகும்,
இடையில் சிதைந்து கிடந்த
என் இதயத்தை,
உன் விழிப்பார்வையால்
ஒருமுகப்படுத்தினாய்...
உருவம் இன்றி கிடைந்த என்னை
உன் அன்பெனும் உளியால்,
உருவம் கொடுத்தாய்.
உருவம் கொடுத்தாய்...
உயிர் கொடுக்க மறந்தாய்...
இன்று உன் முன்
ஓர் கற்சிலையாய் நான்...
- செந்தில் குமார் -

Tuesday, July 21, 2009

கானல் நீர் கனவுகள்



கார்மேகமாய் சூழ்ந்திருந்த நீ
உன் பிரிவை பரிசளித்தால் உனர்ந்தேன்,
என் தனிமையின் வெப்பத்தை...
காலம் எனும் கானல்னீரில் கரைந்து விட்ட
உன் நினைவுகளை மீண்டும் பெற காத்திருக்கின்றேன்...
மற்றுமோற் மழைகாலத்திற்காக....
- செந்தில் குமார் -

Monday, June 22, 2009

பிரிவு



மகிழ்ச்சி தந்த மழைதுளிகள் இன்று
வெறும் மழை நீராய் மட்டும் என்னை
நனைத்துசென்ற உன் பிரிவில்...
உனர்ந்தது உன் பிரிவை மட்டுமல்ல...
என்னை சுற்றும் உன் நினைவுகளையும் தான்...
- செந்தில் குமார் -

Monday, June 15, 2009

புன்னகைகை பூவே...


என் கவிதைகளின் பிறப்பிடத்தை கண்டறிய
ஆவல் கொண்டேன்...
கண்டறிந்தேன்! உன் இதழ் பூக்கும்
புன்னகை
யில்,
ஒளிந்த்திருக்கு
ம் என் கவிதைகளை!!!