Wednesday, January 13, 2010

வலி...


முள் தைத்தது என்னவோ
அவள் பாதத்தில் தான்...
வலியை மட்டும் உனர்கின்றேன்...
என் இதயத்தில்...

- செந்தில் குமார் -

Friday, January 8, 2010

நினைவுகள் தேடும் கவிதைகள்...



கடல் அலைகள் வந்து எடுத்துச் சென்ற
உன் காலடி சுவடுகள் தேவையில்லை!
மலையருவிகள் விட்டு சென்ற
உன் வலையோசையும் தேவையில்லை!
உன் வாசம் எடுத்து வந்து என்
ஜன்னல் தட்டும் மழைசரலும்
இனி தேவையில்லை!
நீ சிந்திய புன்னகை மட்டும் போதும்,
உன் நினைவுகலோடு வாழும்...
என் கவிதைகளுக்கு...!

- செந்தில் குமார் -

Wednesday, December 23, 2009

என் காதல்!


இரவில் பிரிந்து விடும் நிழலலாய் அல்ல...
என்னில் கலந்து விட்ட நினைவுகளாய்...
என் காதல்!

- செந்தில் குமார் -

Thursday, November 5, 2009

உன் நினைவுகள்




உன் நினைவுகள்


இழந்துவிட்ட உன் அருகாமையினால்...
இன்று உன் நினைவுகள் மட்டும்,
என் கவிதைகளாக...

- செந்தில் குமார் -

Monday, October 19, 2009

வலியின் சுகம்...


உன் வார்தையில் உள்ள,
நிராகரிப்பிலும் உனர்ந்தேன்...
ஒரு வலி மிகுந்த சுகத்தை..!
- செந்தில் குமார் -

Saturday, October 3, 2009



மண் மீது விழுந்த மழைதுளிகள்
மண்வாசத்தையும்...
என் மீது விழுந்த மழைதுளிகள்
உன் வாசத்தையும் தந்ததால் உனர்ந்தேன்...
என்னில் பெய்த மழை நீ என்பதை..

- செந்தில் குமார் -

Tuesday, September 8, 2009



சில கணவுகளுகும்,

சில நினைவுகளுகும்,
இடையில் சிதைந்து கிடந்த
என் இதயத்தை,
உன் விழிப்பார்வையால்
ஒருமுகப்படுத்தினாய்...
உருவம் இன்றி கிடைந்த என்னை
உன் அன்பெனும் உளியால்,
உருவம் கொடுத்தாய்.
உருவம் கொடுத்தாய்...
உயிர் கொடுக்க மறந்தாய்...
இன்று உன் முன்
ஓர் கற்சிலையாய் நான்...
- செந்தில் குமார் -